என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பைக் மோதல்"
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த ஜெங்கம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மகன் விக்னேஷ் (வயது 20). செங்கல்பட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-வது ஆண்டு படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் நரேஷ் (20) இருவரும் நேற்று இரவு தேசூரில் நடந்த உறவினர் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொள்ள விக்னேஷ் நரேஷ் இருவரும் பைக்கில் சென்றனர்.
விழா முடிந்ததும் நள்ளிரவு வீடு திரும்பினர். தெள்ளார் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட விக்னேஷ் பைக்கை இடதுபுறமாக திருப்பினார்.
அப்போது எதிர்பாராத விதமாக பைக் சாலையோர பனை மரத்தில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த நரேஷ் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இது தொடர்பாக தேசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை காந்திநகர், ஆர்.எம்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் நவீன் (வயது 17). பொன்மேனியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று நவீன், மோட்டார் சைக்கிளில் கூடல் நகர் ரெயிலார் காலனி அருகில் உள்ள குட்செட் பகுதியில் சென்றார். திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த பைக், மரத்தில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாணவர் நவீன், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் மதுரை புதூர் ஆர்.வி.நகரைச் சேர்ந்தவர் கமருதீன் (வயது 46). இவர் கொடிக்குளம் கண்மாய்க்கு குளிக்கச் சென்றார். எதிர்பாராத விதமாக அவர், கண்மாய் சகதியில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இது குறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கமருதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் ஓடக்கரையை சேர்ந்த மூக்காண்டி மனைவி அன்னலட்சுமி (வயது 65). இவர் வீடுகளில் வேலை செய்து வருபவர். நேற்று வேலைக்கு செல்வதற்காக திருச்செந்தூர்-காயல்பட்டினம் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
தனியார் அறக்கட்டளை மருத்துவமனை அருகே செல்லும் போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மேல் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் தூக்கி வீசப்பட்ட அன்னலட்சுமி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து பற்றி ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்